Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தி சில அழகு குறிப்புகள்...!!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:32 IST)
எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துக்களை விட, எலுமிச்சை தோலில் வைட்டமின் சி மற்றும் ஏ, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.


எலுமிச்சை தோல் ஆரோக்கியம் மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு அதிகம் பயன்படுகிறது. எலுமிச்சை தோல் சருமத்திற்கு நல்ல பிளிச்சிங் தன்மையை கொடுக்கும் என்பதால். எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

பின்பு அந்த பொடியுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு ஸ்பூன் கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் பொலிவுடன் காணப்படும். குறிப்பாக சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் கருமைகளும் மறைந்துவிடும்.

நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த பின்பு எலுமிச்சை தோலால், நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த பின்பு கழுவ வேண்டும். இவ்வாறு 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.

எலுமிச்சை தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள். இவ்வாறு செய்வதினால் உடல் எடை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments