Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு சமையலறை பொருட்களை கொண்டு வெள்ளையாக்க எளிய வழிகள் !!

Webdunia
பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான்.


இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும்.
 
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும். 
 
மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.
 
1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம். 
 
தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும். எலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும்.
 
வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சரும கருமையைப் போக்க வல்லது. இத்தகைய வினிகருடன் தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, முழங்கை கருமை மாயமாகும். கடுகு எண்ணெய் ஒரு ஆன்டி-செப்டிக் பொருள். இதை முழங்கையில் தினமும் தடவி வந்தால், முழங்கை மேலும் கருமையாவதைத் தடுக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த சோகை குறைய வேண்டுமா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்கள்..!

நினைவாற்றல் குறைபாடு ஏற்பட என்னென்ன காரணங்கள்?

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments