Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி கொட்டுவதில் இருந்து விடுபட எளிய குறிப்புக்கள் !!

Webdunia
தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.

உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி (B), வைட்டமின் இ (E) மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும்.
 
தலை முடியில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதின் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும். தினமும் தலைக்கு குளித்து தலையில் அழுக்கு தூசு போன்றவை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். தலையில் இருக்கும் பொடுகை அகற்றுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். பொடுகை நீக்கும் மருந்தை பயன்படுத்தி தலையை பொடுகு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளலாம்.
 
தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்வு ஏற்படும். நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
 
கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி கொட்டுவதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெற முடியும். கறிவேப்பிலையில் நிறைந்துள்ள இரும்புசத்து தலைமுடிக்கு அதிக அளவு போஷக்கினை கொடுத்து  முடி உதிர்வை தடுக்கிறது.
 
வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிறை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும். தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை அலசுவதின் மூலம்  முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.
 
வெதுவெதுப்பான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments