Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணுக்கு அடியில் உள்ள கருவளையம் நாளடைவில் மறைய வேண்டுமா...?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (15:19 IST)
உருளைகிழங்கை மிக்ஸியில் அடித்து அதன் சாறை பிழிந்து சுத்தமான காட்டனை அதில் நனைத்து சாறு இழுக்கும் வரை ஊறவிடவும். பிறகு அந்த காட்டனை எடுத்து கண்களின் மீது வைக்கவும்.


பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல அரைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

1 ஸ்பூன் மஞ்சள் தூளில், 2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாகக் குழைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் பேக் போல் போட்டுக்கொள்ளலாம்.

ஒரு ஸ்பூன் தக்காளி சாறுடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.  ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.

ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும். வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களும் நீங்கிவிடும்.

வெள்ளரிக்காயை பேஸ்ட் போல் அரைத்து கண்களில் தடவி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் மறையும்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments