Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தின் அழகை மேம்படுத்தும் ஏராளமான குணங்கள் அடங்கியுள்ள சாமந்திப்பூ !!

Webdunia
சாமந்திப்பூவில் அழகை மேம்படுத்தும் ஏராளமான குணங்கள் அடங்கியுள்ளன.சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.

அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்து விடவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
 
சாமந்திப் பூ - 20 எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 5 முறை தண்ணீரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர், தண்ணீரை வடித்துவிட்டு பூக்களை மட்டும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
 
3 கப் தண்ணீரில் 5 சாமந்திப் பூவைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அரை கப் அளவிற்கு தண்ணீரை வற்ற விட வேண்டும். தண்ணீர் அரை கப் அளவிற்கு வந்தவுடன் அதனை ஆற வைத்து ஐஸ் க்யூப் டிரேக்களில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர், அந்த ஐஸ் க்யூப்களை எடுத்து ஒரு துணியில் சுற்றி, முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் சோர்வடைந்த வாடிய சருமம் பளிச்சென்று மின்னும். மேலும், இழந்த இளமையைத் திருப்பித் தரும்.
 
சாமந்திப்பூ கலந்த டீ டிகாக்ஷனை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும். கண்களின் வீக்கம் குறையும்.
 
இந்த டிகாக்ஷனை நீர்க்கச் செய்து, பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் வெயில் பட்டுக் கருத்துப் போன சருமம் நிறம் மாறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments