சருமம் மென்மையாகவும் வெள்ளையாகவும் மாற்ற உதவும் குங்குமப்பூ..!!

Webdunia
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து  நன்றாக குழைக்கவும். 

இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வந்தால் நகங்களும் இயல்பான நிறம் பெறும். 
 
நக சுத்தி வந்து கருத்துப் போன நகங்கள், உடைந்து போன நகங்களை குங்குமப்பூ மற்றும் வெண்ணெய் கலவை சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு  வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான். அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் இந்தக் கலவையைப் பயன்படுத்தினால் புருவம்  அடர்த்தியாகவும் அழகாகவும் மாறும்.
 
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.
 
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும்.  இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். 
 
சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து இருக்கும். இந்த கருமையை நீக்க குங்குமப் பூவை பயன்படுத்தி வந்தால் நிறம் மாறி உதடுகள் அழகாகும்.
 
ப்ரஷ் க்ரீமுடன் குங்குமப்பூவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து, பின் அதன் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், சருமம் மென்மையாகவும், வெள்ளையாகவும் மாறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழைத்தண்டு உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள்..!

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

வாரம் ஒருமுறை கோவைக்காய் சாப்பிடுங்கள்.. ஏராளமான நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்