முகத்தை பொலிவோடு வைத்திருக்க உதவும் ரோஸ் வாட்டர் !!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:27 IST)
வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுப்பதால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.


ரோஸ் வாட்டருடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், வெயிலினால் கருமையடைந்த சருமம் மீண்டும் பொலிவோடு மாறும்.

உங்கள் உதடு ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்க வேண்டுமெனில், தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு உதட்டை துடைத்து எடுங்கள். இதனால் உதட்டில் உள்ள கருமை போய்விடும்.

வெந்தயத்தை அரைத்து அதில் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகுத் தொல்லை நீங்குவதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஷாம்பு போட்டு தலையை அலசியப் பின்னர், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்தாலோ அல்லது ஷாம்புவுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொண்டாலோ, முடி பட்டுப் போன்று பொலிவாக காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

முருங்கை கீரையின் மகத்துவமான பலன்கள்

ஆரோக்கிய அதிசயமான பாதாம் பருப்பின் முக்கிய நன்மைகள்!

மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காமல் தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்..!

நுண்பிளாஸ்டிக் துகள்கள்: இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 4.5 மடங்கு அதிகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments