Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருமையடைந்த சருமத்தை பொலிவாக்கும் ரோஸ் வாட்டர் !!

Rose water
Webdunia
திங்கள், 30 மே 2022 (09:34 IST)
வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுப்பதால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.


ரோஸ் வாட்டருடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், வெயிலினால் கருமையடைந்த சருமம் மீண்டும் பொலிவோடு மாறும்.

உதடு ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்க வேண்டுமெனில், தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு உதட்டை துடைத்து எடுங்கள். இதனால் உதட்டில் உள்ள கருமை போய்விடும்.

வெந்தயத்தை அரைத்து அதில் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகுத் தொல்லை நீங்குவதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஷாம்பு போட்டு தலையை அலசியப் பின்னர், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்தாலோ அல்லது ஷாம்புவுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொண்டாலோ, முடி பட்டுப் போன்று பொலிவாக காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி வெறும் வயிற்றில் செய்வது நல்லதா? ஆபத்தா?

குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்.. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்..!

வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments