Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்...!

Webdunia
கண்களைச் சுற்றி கருவளையம் இருந்தால், அழகான பெண்களைக் கூட அவலட்சணமாக்கிக் காட்டும். இதைப் போக்க,  தேங்காய் எண்ணெயில் மஞ்சள்பொடி கலந்து குழைத்து, அதை வெதுவெதுப்பாகச் சுடவைத்துத் தினமும் குளிப்பதற்கு முன்  கண்களைச் சுற்றி பூசி வைத்திருந்து, பத்து நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் கருவளையம் காணாமல் போய்விடும்.

 
* பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம்  சிகப்பழகு பெறும்.
 
* எலுமிச்சம்பழச் சாறில் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி, ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் நல்ல நிறம்  பெறும்.
 
* ஆப்பிள் பழத்தை நறுக்கித் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால், கண்கள் நல்ல அழகு பெறும்.
 
* உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு சிறிதளவு பவுடரைத் தேய்த்துவிட்டுப் பின்னர் போட்டால் அதிக நேரம் லிப்ஸ்டிக்  அழியாமல் இருக்கும்.
 
* இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர் இவற்றைக் கலந்து இரவில் முகத்தில் தேய்த்துவிட்டுப் பின்பு  நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், பகலில் போட்ட மேக்கப் சுத்தமாக நீங்கி, முகம் இயல்பான நிலைக்கு  வந்துவிடும்.
 
* தினமும் சுத்தமான ஆமணக்கு எண்ணெயைப் புருவங்களில் தேத்தால் புருவமுடி கறுப்பாகவும் கவர்ச்சியாகவும் தோன்றும்.
 
* பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவிக்கொண்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும்.  சில நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் முகம் தக்காளி போல பளபளக்கும்.
 
* முகம் பளபளப்பாக குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம்  சென்றதும் முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளடைவில் முகம் பளிச்சிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள்

நீங்கள் சாப்பிடும் உணவு மட்டுமல்ல, அதை சமைக்கும் முறைகூட 'சர்க்கரை அளவை உயர்த்தலாம்'

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

மழை காலத்தில் வரும் நோய்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

தோல் அரிப்பு ஏற்படுவது எதனால்? என்ன தீர்வு?

அடுத்த கட்டுரையில்
Show comments