Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் பிரச்சனை மெனோபாஸ்

பெண்கள் பிரச்சனை மெனோபாஸ்
, வெள்ளி, 20 நவம்பர் 2015 (15:25 IST)
மெனோபாஸ் என்பது பெண்களாய் பிறந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகும். இதனால் பயப்பட தேவையில்லை.

 
இந்த காலகட்டத்தில் பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரிதும் பாதிப்படைகிறார்கள்.
 
நாற்பது(40) வயது முதல் 55 வயதுடைய பெண்கள் மெனோபாஸ் அதாவது மாதவிலக்கு நின்று விடுவதைதான் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
 
சில பெண்களுக்கு உடல் எடை அதிகமாவதுடன், இரத்தபோக்கும் அதிகமாக இருக்கும்.
 
மெனோபாஸ் ஏற்படும் நேரத்தில் அதிக படபடப்பு மற்றும் டென்ஷன், அதிகபடியான கோபம், எரிச்சல், வியர்த்து கொட்டுதல், மனசோர்வு, கவனக்குறைவு, உணர்வு ரீதியான பிரச்சனையும் தலைதூக்கும்.
 
மாதவிடாய் நின்ற பெண்கள் தூக்கம் பிரச்சினைகள், பகல்நேர அயர்வு மற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பெண்கள் தமக்கு இயற்கையிலே ஏற்படும் மாற்றம்தான் இந்த மெனோபாஸ்.
 
எலும்புருக்கி நோய், எலும்பு மற்றும் மூட்டு சீரழிவு, மூட்டு வலி மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் போன்ற சுகாதார பிரச்சினைகள் பல அதிக அளவில்  பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். மெனோபாஸ் வயதை எட்டும் பெண்கள் இது ஒரு நோய்யல்ல புரிந்து அதற்கேற்றபடி மனநிலையை தயார்படுத்தி கொள்ளவேண்டும்.
 
மாதவிலக்கு முற்றிலும் நின்று விட்ட பிறகு உடலில் ஒரு தொய்வு ஏற்படும்.  அதனை கண்டு துவண்டுவிடாமல் தைரியமாக எதிர்கொள்ளவெண்டியது அவசியமாகும்.அதிகபடியான எடை கூடாமல் பார்த்து கொள்ளவது நல்லது.
 
அதற்கான சத்தான உணவுவகைகளை உண்டு உடலை பாதுகாப்பது நமது கடமையாகும்.  உரிய நேரத்தில் மருத்துவரை அணுகி ஏற்ற மருத்துவ ஆலோசனைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil