Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமம் பொலிவு பெற உதவும் எலுமிச்சை தோல்; எப்படி தெரியுமா...!!

Webdunia
எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துக்களை விட எலுமிச்சை தோலில் வைட்டமின் சி மற்றும் ஏ, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
எலுமிச்சை தோல் சருமத்திற்கு நல்ல பிளிச்சிங் தன்மையை கொடுக்கும் என்பதால் எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காய்வைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். இதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து  சருமத்தை குளீர்ந்த நீரால் கழுவவேண்டும்.
 
சிலருக்கு நகம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். அவர்கள் நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்த பின்பு எலுமிச்சை தோலால், நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த பின்பு கழுவவேண்டும். இவ்வாறு 2 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நகங்களில்  உள்ள மஞ்சள் நிறம் மறைந்துவிடும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை காயவைத்த பொடியை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள். இவ்வாறு செய்வதினால உடல் எடை நாளடைவில் குறைய  தொடங்கும்.
 
கரும்புள்ளிகள் மறைய வெயிலில் காயவைத்து பொடி செய்த எலுமிச்சை பொடியில் ரோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு முகத்தில் தடவலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள  கரும்புள்ளிகள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments