Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்கும் வழிகள்!!

Webdunia
கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். தூக்கம் குறைவாக இருந்தாலே கருவளையம் ஏற்படும். அதிகமான கணினி பயன்பாடும் கருவளையம் தோன்ற காரணமாகும்.
வெள்ளரிச்சாறும், பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களைச் சுற்றிலும் தடவி, மசாஜ் செய்யலாம். மேலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்கலின் கருவளையத்தைப் போக்கும்.
 
தூங்கப் போகுமுன் கண்களின் கீழ் ஆலிவ் ஆயில் தடவலாம். வெண்ணெய்யுடன் கொத்தமல்லிச்சாறு கலந்து கண்களுக்கு பேக் போடலாம். சந்தனம் மற்றும் ஜாதிக்காயை இழைத்து, கண்களைச் சுற்றிலும் பூசலாம்.
 
ஊற வைத்த பாதாமை பாலுடன் சேர்த்து மை போல அரைத்து,கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம். தினமும் உருளைக் குழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்டு கழுவவேண்டும்.
 
தேனில் திருநீறைக் குழைத்து, கருவளையத்தின்மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். தோல் நீக்கிய தக்காளி விழுது, விதை நீக்கிய கறுப்பு திராட்சை விழுது இவற்றை கண்களின் மீது பூசலாம்.
 
பப்பாளியின் சதைப் பகுதியை பாலாடையுடன் சேர்த்து மசித்து முகம், கழுத்துப் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
 
உணவில் கீரை வகைகளை சேர்க்கவேண்டும். வைட்டமின் எண்ணெய் வைத்து கண்ணை சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும். மேலும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments