Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு பலன்தரும் ஐஸ் க்யூப் மசாஜ்...!!

Webdunia
ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள். பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்யும்.

* வெயில் காலங்களில் மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.
 
* அதிக எண்ணெய் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். இதனால்  சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.
 
* சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன்  துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.
 
* கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ்  செய்யலாம். தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 
* கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி, அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம். க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான பலன்கள்..!

வேகவைத்த முட்டை தாவரங்களுக்கு நன்மை தருகிறதா? ஆச்சரிய தகவல்..!

எலும்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் பிரண்டை.. முக்கிய தகவல்கள்..!

உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

அடுத்த கட்டுரையில்
Show comments