Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது எப்படி...?

Webdunia
கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும்.

வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலை முடிக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
 
பூந்திக் கொட்டை தலையில் உள்ள அழுக்கையும் எண்ணெய் பிசுக்கையும் மென்மையாக நீக்க உதவுகிறது. சிகைக்காய் தலையில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன்  சிறந்த மருந்து பொருளும் கூட. பூஞ்சைகளை நீக்குகிறது மற்றும் சருமத்தில் உள்ள கிருமிகளை அழிக்கிறது.
 
வெந்தயம் எண்ணெய் பசை மற்றும் முடியைக் கருமையாக்கும் தன்மை கூந்தலுக்கு தேவையான பொலிவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.
 
நெல்லி முள்ளி தலைமுடி உதிராமல் நன்கு ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. மேலும் முடியின் கருமை நீங்காமல் காக்கிறது.
 
செம்பருத்தி பூக்கள் தலையில் உள்ள பொடுகு மற்றும் பேன்களை நீக்கும். தலைமுடிக்கு வழவழப்பு தன்மை தருவதில் சிறந்தது. மேலும் குளிர்ச்சியானது.
 
சிகைக்காய் பொடி தயாரிக்க தேவையான அளவு: பூந்திக் கொட்டை - 10, சிகைக்காய் - 1 கப், நெல்லிமுள்ளி - 1 கப், வெந்தயம் - 1 கப், செம்பருத்தி பூக்கள் - 3.
 
செய்முறை:
 
முதலில் பூந்திக் கொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய  பூந்திக் காய்களை போடுங்கள். அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள். கூடவே நெல்லி முள்ளியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சேருங்கள். அதனுடன் சிகைக்காய்களை சேர்த்து மிஷினில் கொடுத்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளலாம். தேவையான போது சிறிதளது எடுத்து பயன்படுத்தலாம்.
 
குறிப்பு 2:
 
மேற் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வையுங்கள். இவற்றோடு மூன்று செம்பருத்தி பூக்களை இதழ்களை சேர்த்து,  இந்தக் கலவையில் உள்ள நீர் கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சி, ஆறியபின் காய்ச்சிய நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். மேலும் இதனை  நீங்கள் பிரிட்ஜில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments