Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளர செம்பருத்தி ஆயில் தயாரிப்பது எப்படி...?

Webdunia
அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ - 10,  தேங்காய் எண்ணெய் - 250 கிராம், வெந்தயம் - 1 ஸ்பூன்.
 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
 
இந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
 
பயன்கள்: செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும். முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
 
பொடுகை போக்க மிகவும் சிறந்தது. நரைமுடியை போக்கும். தலை அரிப்பை தடுக்கும்.
 
குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments