Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி பாரமரிப்பு முறைகளும் இயற்கை மருத்துவ குறிப்புகளும்...!!

Webdunia
நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப்  போக்கும்.

நெல்லிக்காயை ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊறவைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.
 
இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவை குழைத்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போய்விடும்.
 
தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெய்யைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
 
கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தலையில் மசாஜ் செய்யவும். அரை  மணிநேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
 
ஒரு பங்கு சீயக்காய் வெந்தயம் கால் பங்கு பச்சைப்பயறு அரைப்பங்கு புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப்  பொருள்கள் இல்லாத பொடி எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது.
 
பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து பொடி செய்து பசும் பாலில் குழைத்து தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
 
தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும்போது சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி வெறும் வயிற்றில் செய்வது நல்லதா? ஆபத்தா?

குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்.. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்..!

வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments