Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் க்ரீன் டீ !!

Webdunia
க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. 

க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும்  பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இங்கு காண்போம். 
 
நார்மல் சருமத்திற்கு மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து பேக் போட வேண்டும். சுமார் 15 - 20 நிமிடங்களுக்கு பிறகு  குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசுகளை நீங்கி சருமம் புத்துணர்ச்சியாகும்.  மஞ்சளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும். 
 
1 டீஸ்பூன் கிரீன் டீ, 1 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து அதனுடன் ½ தேக்கரண்டி தேன் கலந்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தின் அப்ளை செய்து  உலர்ந்தவுடன் கழுவ வேண்டும். ஆரஞ்சு தூள் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முகப்பரு வடுக்களை மறைந்து போக செய்கிறது. மேலும் தேன் உங்கள்  சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. 
 
எண்ணெய் பசை சருமத்தால் அவதிப்படுபவர்கள் 1 ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், 2 ஸ்பூன்  கிரீன் டீ கலந்து முகம் மற்றும் கழுத்தில் பேக் போட வேண்டும்.  இதனை வாரம் ஒரு முறிய செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படும்.

முல்தானி மெட்டியில் அதிகளவிலான  தாதுக்கள் நிறைந்துள்ளதால் இது உங்கள் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெய்களை உறிஞ்சி உடனடி பிரகாசத்தை தருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments