Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் கோல்டன் ஃபேஷியல் செய்ய வேண்டுமா...?

Webdunia
இயற்கையான முறையில் கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
 
ஆரஞ்சு, கற்றாழை, முல்தானி மட்டி, காட்டன் துணி, தண்ணீர். முதலில் ஆரஞ்சை எடுத்துக்கொண்டு அதனை பாதியாக நறுக்கி கொள்லவும். பின்பு 1 கற்றாழையை எடுத்து உள்ள ஜெல் பகுதியை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
 
பிறகு மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்யவேண்டும். இதன்மூலம் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல் அதிக பலனை தரும்.
 
அடுத்து முல்தானிமட்டியை ஆரஞ்சு சாறு சேர்த்து முகத்தில் பூசி கொள்ளவும். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளோர்க்கு முல்தானிமட்டி  சிறந்த ஒன்று. மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம். இதனை கண்கள், மூக்கு, நெத்தி, தாடை ஆகிய  அனைத்து பகுதிகளிலும் நன்கு தடவி மசாஜ் செய்யவும். பின்பு 5 நிமிடம் கழித்து முகத்தை உலர்த்த, பின்னர் தண்ணீரில் கழுவி விடவும்.
 
அடுத்து கற்றாழை ஜெல்லை 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும்.  அதன்பிறகு அதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும். பிறகு இதனை 10 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும்.  கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும்  பொலிவுடனும், அழகாகவும் மாறும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments