Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க சில இயற்கை வழிமுறைகளை பார்ப்போம்.
தவறான் உணவுப்பழக்கங்கள் உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மர்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.
 
குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடானது இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசு அடைவதால், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது. 
 
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. 
 
தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு  தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும்.
 
தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர  வேண்டும்.
 
பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. மேலும் இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments