Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும அழகை பாதுகாக்கும் கொய்யா இலைகள் எப்படி தெரியுமா...?

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (18:30 IST)
கொய்யா இலைகளுக்கு இயற்கையாகவே சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் தன்மை இருக்கிறது. கொய்யா இலையை நன்கு அரைத்து சிறிது தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர சருமம் புது பொலிவு உண்டாகும்.

கொய்யா இலைகளை அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பூசி 30 நிமிடங்கள் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இது முகத்தில் உள்ள துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பளிச்சிட வைக்கும்.
 
கொய்யா இலைகளை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வர முகப்பரு நீங்கும். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முக சுருக்கங்கள் நீங்கி முகதிற்கு நல்ல பளபளப்பை தரும்.
 
பொடுகு பிரச்சினைக்கு கொய்ய இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு சூடு ஆறியதும் தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்கி முடி உதிர்வதும் சரியாகும்.
 
முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால் கொய்யா இலைகளை பேஸ்ட் போல் அரைத்து எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments