Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டிலேயே செய்யலாம் கற்றாழை ஃபேஸ் பேக்குகள்....

வீட்டிலேயே செய்யலாம் கற்றாழை ஃபேஸ் பேக்குகள்....

வீட்டிலேயே செய்யலாம் கற்றாழை ஃபேஸ் பேக்குகள்....
சுட்டெரிக்கும் வெயிலினால், சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவையுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும்.


 
 
அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். சூரியனின் கதிர்கள் சருமத்தில் அளவுக்கு அதிகமாக படும்போது, சரும செல்கள் அளவுக்கு அதிகமாக பாதிப்படைந்து, நாளடைவில் அது சரும புற்றுநோயாக மாறிவிடும். எனவே கோடையில் சருமத்திற்கு பராமரிப்பு என்பது அவசியமாகிறது. 
 
பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்று கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம். வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.  
 
1. தேன், மஞ்சள்தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் பொலிவான சருமத்தைப் பெறலாம். 
 
2. வெயிலில் அதிகம் சுற்றினால் சருமத்தில் ஒருவித கருமை ஏற்படும். அதனைப் போக்க, கற்றாழை ஜெல்லில் தக்காளி சாறு சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தின் கருமை நீங்கி, நிறம் அதிகரிக்கும்.
 
3. கரும்புள்ளிகள் மறைய, கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும முகத்தை கழுவ வேண்டும். 
 
4. சரும அழகை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லில், மாம்பழச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி  ஊற வைத்து கழுவ வேண்டும்.  
 
5. கற்றாழை ஜெல்லுடன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும். 
 
6. கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சென்சிட்டிவ் சருமத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். 
 
6. வறட்சியான சருமத்தைப் போக்க, கற்றாழை ஜெல்லுடன், எலுமிச்சை சாறு மற்றும் பேரிச்சம் பழம் சேர்த்து கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை மாஸ்க் போட்டு வந்தால், வறட்சியான சருமம் நீங்கும். 
 
7. சிலருக்கு சருமத்தில் சொரசொரப்பாக ஆங்காங்கு இருக்கும். அதை போக்க, கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கெட்டியாக பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு