Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வதை தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் அழகு குறிப்புகள் !!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (11:58 IST)
செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்று நன்கு பளப்பாக மாறும்.


வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும். வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தேய்த்துக் குளிக்கலாம்.

பாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும். இரவு தூங்க செல்வதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை லேசாக தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று தலை முடி வலுவாகும்.

கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்து வர வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி உறுதியாகும். தலை முடிக்கு குளிர்ச்சி உண்டாகும். தலையில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தை கட்டுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கும்.

படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments