Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதங்களை பராமரிக்க உதவும் அழகு குறிப்புகள் !!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:37 IST)
பாதங்களை பராமரிக்க  ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால் அழுக்குகளை நீக்கி, பாதக் கிருமிகளை ஒழிக்கும்.


தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மின்னும். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது  ஆகிய உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மிதமான சுடுநீரில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பாதங்களில் வியர்வை சுரப்பிகள் இருப்பதால் வியர்த்த பாதங்களில் செருப்பு அணியக்கூடாது. கால்களில் காயம் மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments