Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவினால் ஏற்பட்ட தழும்புகளை போக்க உதவும் அழகு குறிப்புகள் !!

Webdunia
வெயிலினால் ஏற்பட்ட கருமை மறைய ஆரஞ்சுப் பழத் தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, பாலுடன் கலந்து தோலில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரவேண்டும்.


பெண்களுக்கு முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, சோளமாவு, முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இம்மூன்றையும் பசை போல ஆகும் வரை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் மெதுவாக எடுத்தால் முடியும் எளிதில் வந்துவிடும்.
 
வேப்பிலை, துளசி மற்றும் புதினா இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்து பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
 
புதினா, வேப்பிலை, குப்பைமேனி மற்றும் சிறிது மருதாணி இலைகளை காயவைத்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால் முகத்தில் வியர்க்குரு வராமலும் வெயிலில் கறுத்துப் போகமலும் இருக்கும்.
 
அரை தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, இரண்டு தேக்கரண்டி புதினா சாறு ஆகியவற்றுடன் பயறு மாவை கலந்துகொண்டு இரவு படுக்கும் முன் முகத்தில் தட்வி பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும், பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதில் தண்ணீர் புகுந்து விட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments