Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகப்பருக்களுக்கு நல்ல தீர்வு தரும் அழகு குறிப்புகள்...!!

Webdunia
உங்கள் கைகள் மூலம் பருக்களை தொடாமல் இருக்க வேண்டும். இதன் மூலம் பாக்டீரியா பரவாமல் தடுக்க முடியும். எண்ணெய் சார்ந்த தயாரிப்புகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் பாக்டீரியா சருமத்தை மேலும் பாதிக்கும்.

நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும். வெட்டிவேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது  தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
 
பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும். ஜாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.
 
சந்தனப் பொடியை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் சருமம் பொலிவோடு காணப்படும். இதனால் முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
 
முகம் பளபளப்பாக: முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப்  பொலிவு பெறும்.
 
வசீகரம் பெற: அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.
 
வறண்ட சருமத்துக்கு: உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போதுச் சாப்பிட்டு வரவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments