Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும் கற்றாழை !!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:59 IST)
கற்றாழை சரும பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக வெயிலில் சென்று வந்தால் உருவாகும் சன் டேன் எனும் கருமையை நீக்க கற்றாழை முக்கிய பங்காற்றுகிறது.


கற்றாழை ஜெல் முகப்பரு மற்றும் முகப்பரு தழும்புகளைப் போக்க மட்டுமின்றி, ஸ்ட்ரெட்ச் மார்க்களையும் மறைய வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை ஊட்டமளித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல்லை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு அதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.

கற்றாழையின் இரண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும் கழுவிக்கொள்ளவும்.

கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் காயங்கள், வீக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே தினமும் இரவு கற்றாழை ஜெல்லை சருமத்தில் அப்ளை செய்து பின்னர் மறுநாள் காலை கழுவி வந்தால் சருமம் பொலிவாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments