Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌லி‌ப்‌ஸ்டி‌க் ப‌ற்‌றிய ச‌ந்தேக‌ங்க‌ள்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (11:39 IST)
லாங் லா‌ஸ்ட்டிங் ‌லி‌ப்‌ஸ்டி‌க்குக‌ள் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். இதனை‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் போது உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.

திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்‌ஸ்டிக்குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும். நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளா‌ஸ் தடவலாம். இது விரைவில் உலர்ந்துவிடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை.

‌ லிப் பென்ஸில் உதடுகளை மேலும் அழகாக்குகிறது. லிப்‌ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்‌ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம். லிப் பென்ஸிலால் தடவுவதால் லிப்‌ஸ்டிக் உதடுகளைவிட்டு வெளியே பரவாமல் இருக்கும்.

உதடுகளைச் சிறியதாக்க, உதடுகளில் ஃபவுன்டேஷன் தடவி, உதட்டுக்கு உட்புறம் லிப் பென்ஸிலால் உதட்டின் வடிவத்தை வரைய வேண்டும். அதற்குள் லிப்‌ஸ்டிக் தடவலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments