Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாசற்ற சருமத்திற்கு சில குறிப்புகள்...

மாசற்ற சருமத்திற்கு சில குறிப்புகள்...
, வியாழன், 1 டிசம்பர் 2011 (17:08 IST)
அம்மைத் தழும்புகள் மறைய

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

முகத்தில் ஏற்படும் கருப்பைப் போக்கும் மருந்து

ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 5௬ நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

முகப்பரு அகல

புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.

பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும்.

முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

அம்மை வடுக்களை அழிக்க

சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15௨0 நிமிடங்கள் உலற விடுங்கள்.

பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil