Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகுக்கு ஆரஞ்சு பழம்

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2013 (16:07 IST)
FILE
கண்கள் "பளிச்" ஆக ஆரஞ்சு ஜூஸை ஃ‌ப்‌ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர, கண்கள் "பளிச்" ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல். உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலைபருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்து வந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

FILE
முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் இருந்தால் ஆரஞ்சு தோல் அரைத்த ‌விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர், 2 சிட்டிகை இவற்றைகெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்கப் போகும் போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

சிலருக்கு கண்களுக்குக் கீழ் கருவளையம் இருக்கும் அதை நீக்க வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து கருமை உள்ள இடத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

ந‌ன்‌றி: பசுமை இ‌ந்‌தியா!

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments