Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்...!

Webdunia
கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு நீர்ச்சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும். கோவைக்காய் வேர், குஷ்டம், பிரமோகம், வாத நோய்கள் ஆகியவற்றுக்கு  மருந்தாகும்.
கோவைக்காய் பற்றுக் கம்பிகள் கொண்ட, படர் கொடி வகையான தாவரம். கோவைக்காய் இலைகள் ஐந்து கோணங்களுடைய மடலானவை.  மலர்கள் வெள்ளை நிறமானவை. ஆண் பெண் மலர்கள் தனித் தனியாகக் காணப்படும்.
 
கோவைக் காய்கள் சதை பற்றானவை. நீண்ட முட்டை வடிவமானவை. நீள்வாக்கில் வெள்ளை நிறமான வரிகள் கொண்டவை. பழங்கள்  இரத்தச் சிவப்பு நிறமானவை. முதிர்ந்த கோவைக்காய் தாவரத்தில் காணப்படும் வேர் தடித்து கிழங்கு போல காணப்படும்.
 
கோவைக்காய் இலைச் சாறு 20மிலி உடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும்  குடித்து வரவேண்டும். 7 நாட்கள் வரை சாப்பிட வெட்டை நோய் குணமாகும்.
 
கோவைக்காய் இலைச் சாறு, காலை, மாலை 50 மிலி அளவு 4 நாள்கள் குடித்து வர சீதபேதி குணமாகும். கோவைக்காய் வேர்க்கிழங்கு சாறு 10மிலி காலையில் மட்டும் குடித்து வர ஆஸ்துமா குணமாகும்.
 
கோவைக்காய் கோழையகற்றும்; முறைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்தும்; சிறுநீர் மற்றும் வியர்வையை பெருக்கும்; வாந்தி உண்டாக்கும்.
 
இலை மற்றும் தண்டு - கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
 
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை  இலைச் சாறு, பித்தம், மூலநோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

பேரீச்சம்பழம்: அளவோடு சாப்பிடுங்கள், ஆபத்துகளைத் தவிருங்கள்!

வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு

காய்ச்சலுக்கு இளநீர்: பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments