Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழைக்காலங்களில் என்ன உணவுகளை சாப்பிடலாம்?

மழைக்காலங்களில் என்ன உணவுகளை சாப்பிடலாம்?
, புதன், 28 அக்டோபர் 2015 (11:18 IST)
மழைக்காலம் வந்துவிட்டால் போதும் சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி, தலைவலி என மழைக்கால நோய்கள் வந்துவிடும். மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். எனவே மழைக்கலத்தில் எந்த மாதிரியான உணவை எப்படி சாப்பிடலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



 
 
* மதிய உணவின்போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
 
* இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து  சாப்பிடுவது நல்லது, இது சளி பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
 
* மழைக்காலங்களில் எல்லாவிதமான காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால், நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில்  உணவில் சேர்த்துக் கொள்வதை தண்ணீர் சத்து ஒத்துக்காதவர்கள் தவிர்க்க வேண்டும்.
 
* பொரியல் செய்யும்போது அவற்றில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
 
* இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை  ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது.
 
* மழைக்காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரை  துகள்களை போட்டு வைக்கலாம்.
 
* கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.
 
* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய்  போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம் உடலுக்கு நல்லது.
 
* உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
 
* அசைவ உணவான மீன், முட்டை, கறி, சிக்கன்  போன்றவற்றை பிரஷ்ஷாக சாப்பிட வேண்டும்.
 
* எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக்கூடாது. சூடாக சாப்பிட வேண்டும்.
 
* பஜ்ஜி,  போண்டா அதிகம் சாப்பிடாமல், உப்பு உருண்டை, இட்லி சாம்பார், பிரட் ரோஸ்ட் என சாப்பிடலாம்.
 
* மேலும் தினமும் சாப்பிடும் உணவையே சற்று  சூடாகச் சாப்பிட்டால் போதும்.

Share this Story:

Follow Webdunia tamil