Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:07 IST)
அந்தரங்க பகுதியில் பலருக்கும் அரிப்பு வர காரணமாக இருப்பது அங்கு வளரும் முடியை ஷேவிங் செய்வதில் போதிய கவனமில்லாமையே.

பொது இடங்களில் எல்லாம் அரிப்பு ஏற்படும் போது பலரும் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாவோம். அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவையும், ஷேவிங் செய்த பின் செய்ய வேண்டியவையும் பற்றிய பதிவு தான் இது.



 


* அந்தரங்க இடத்தில் ஷேவிங் செய்யும் முன் முடியை ட்ரிம் செய்து கொள்வது நல்லது. இதனால் ஷேவிங் செய்யும் போது, ரேசரில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இதன் மூலம் ஷேவிங் செய்யும் போது, ஆங்காங்கு முடி நிற்பதைத் தடுக்கலாம்.

* வெதுவெதுப்பான நீரில் குளியல் மேற்கொள்வது நல்லது. இதனால் அந்தரங்க பகுதியில் உள்ள முடி மென்மையாகி, ஷேவிங் செய்யும் போது முடி எளிதில் வந்துவிடும்.

* அந்த இடத்தை மசாஜ் செய்து, மென்மையான பாடி பிரஷ் கொண்டு சீவினால், அப்பகுதியில் உள்ள முடி தளர்ந்துவிடும்.

* கெட்டியான ஷேவிங் கிரீமை தடவ வேண்டும்.

* பயன்படுத்தும் ஷேவிங் கிரீம் மிகுந்த நறுமணத்துடன் இல்லாதவாறு இருக்க வேண்டும். ஏனெனில் நறுமணமிக்க க்ரீம்கள் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும்.

* ஷேவிங் கிரீம் தடவிய பின் சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

* அந்தரங்க பகுதியை ஷேவிங் செய்யும் போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று வடிவமைக்கப்பட்ட ரேசரை வாங்கிப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித காயங்களும் ஏற்படாமல் முடியை நீக்கலாம்.

* முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, அவ்விடத்தை வளைவு நெளிவுகள் இல்லாதவாறு இழுத்து பிடித்தவாறு ஷேவிங் செய்ய வேண்டும்.

* ஷேவிங் செய்து முடித்த பின், அவ்விடத்தை நன்கு உலர வைக்க வேண்டும்.

* அந்த இடத்தை எக்காரணம் கொண்டும் துணியால் தேய்க்கக்கூடாது.

* அதுமட்டுமின்றி ஷேவிங் செய்த பின் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்தால், அப்பகுதியானது குளிர்ச்சியடைந்து, எரிச்சல் மற்றும் அரிப்பை தடுத்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil