Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்களை அறிவோம்

ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்களை அறிவோம்
, சனி, 5 டிசம்பர் 2015 (13:47 IST)
இயற்கையில் விளையும் கனிகளில் ஆரஞ்சுப் பழத்தின் உள்ள உன்னத குணங்கள் அளவிட முடியாது.


 

 

 
1. செரிக்கும் சக்தியும்,பசியையும், அதிகப்படுத்துவதுடன் வெந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களைப் புதுப்பிக்கிறது.
 
2. இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது.
 
3. வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாயிடு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.
 
4. கர்ப்பமுற்ற பெண்கள் இப்பழச் சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
 
5. பல்வலி, பயோரியா போன்ற கோளாறுகளைத் தீர்க்கும் அதிசய உணவு, உடல் சூடு, வெட்டைச்சூடு, மூல வியாதி போன்றவற்றிற்கும், சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.
 
6. உடல் எடை, மூட்டு வலி, உடம்பில் அதிக உப்புச் சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சிறந்த கனியாக செயல்படுகிறது.
 
7. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதிகளில் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சுப் போன்ற பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம்.
 
8. ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து, நார்சத்து, வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ’பி’, வைட்டமின் ’சி’, பொட்டாசியம், கால்சியம், கந்தகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil