Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைப்பழங்களின் பயன்கள்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (15:30 IST)
தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்து கொண்டால் உணவை நன்கு செரிப்பதோடு, மலசிக்கல் ஏற்படாமல் காக்கும்.


 

 
முக்கனிகளில் ஒன்று வழைப்பழம். வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு. 
 
வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா இடத்திலும் கிடைக்கக் கூடிய பழம்.
இதை ஏழைகளின் பழம் என்றும் கூறுவர். 
 
வாழைப்பழம் மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்டுத்தும் மருத்துவ குணம் உள்ளது.
 
செவ்வாழைப்பழம்
செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்குகிறது. நரம்புத் தளர்ச்சியை போக்கும் இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும். வைட்டமின் அதிகம் உள்ளதால் கண்ணுக்கு நல்லது.
 
பூவன் பழம்
பூவன் பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்ககூடியப் பழம். இது ஜீரண சக்தியுடையது. தினமும் உண்விற்க்கு பின் உண்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாக்காது.
 
ரஸ்தாளி பழம்
ரஸ்தாளி பழம் சாப்பிடுவதனால் கண்ணுக்கும், உடல் வலுவுக்கும் நல்லது. சுவை மிகுந்த இப்பழத்தை உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
 
பேயன் பழம்
பேயன் பழம் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக உடலை வைக்கிறது.
 
பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழம் நல்ல கிளிர்ச்சியை தரும் கோடைக்காலத்தில் தாரளமாக உண்ணலாம். வாதம் நோயாளிகள் குரைத்து கொள்வது நல்லது.
 
கற்பூரவள்ளி பழம்
கற்பூரவள்ளி பழம் கண்ணுக்கு குளீர்ச்சியைத் தரும்.
 
நேந்திரம் பழம்
நேந்திரம் பழம் இரும்புச்சத்தை உடலுக்கு கொடுக்கும் ஒரு அற்புத பழமாக உள்ளது.
 

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

Show comments