Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புற்றுநோயை தடுக்கும் சீரகம்

புற்றுநோயை தடுக்கும் சீரகம்

புற்றுநோயை தடுக்கும் சீரகம்
சீரகம் புற்றுநோயை தடுக்கும் வல்லமையை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.


 
 
வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
 
சீரகத்தை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
 
வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
 
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும். மயக்கத்தைப் போக்கி விடும். பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும். 
 
சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். "நீ இதனையுண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாயாக" என்று அவர்கள் கூறியுள்ளதை நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத் தூள் செய்து சீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil