Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (18:23 IST)
அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்களுக்கு கண் சம்பந்தமான நோய் வரும் நிலையில் சில விஷயங்களை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு தூய்மையான துணியை எடுத்து ஐஸ் வாட்டரில் நனைத்துப் பிழிந்து அதனை கண்ணின் மீது போடுங்கள். இதை சில மணி நேரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

கொத்தமல்லி இலையை நன்றாக நீரில் கொதிக்க வைத்து பின்னர் அதை வடிகட்டி குளிர வைத்து இந்த நீரால் கண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இது எரிச்சல் மற்றும் வலி வீக்கத்தை குறைக்கும்.

மிளகு, சீரகம், அருகம்புல் இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் காயவைத்து அதன் பின் தலையில் தேய்த்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து அதில் சிறிது பஞ்சை நனைத்து கண்களை கழுவலாம்.

கண்களில் வலி மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்தால் முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்தால் கண் சம்பந்தப்பட்ட நோயை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.
<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேங்காய் எண்ணெயும் அரிசியும்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய வழி

நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்? அசத்தல் தகவல்கள்..!

மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்புடன் அரிதான தோல் புற்றுக் கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

அடுத்த கட்டுரையில்
Show comments