Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (18:59 IST)
காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது  தற்போது உலகம் முழுவதும் ஒரு ஆரோக்கியமான பழக்கமாக பிரபலமாகி வருகிறது. இது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
 
மனிதன் இயற்கையாக நடக்கும் முறையை இது மீண்டும் கொண்டு வருகிறது. இதனால் முழங்கால், இடுப்பு வலிகள் குறையலாம். மேலும், நரம்புகள், தசைகள் மிதமான அழுத்தத்தை உணர்ந்து இயல்பாக வேலை செய்ய உதவுகிறது.
 
நமது உடலில் நேர்மறை மின்சக்தி இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் பூமியில் எதிர்மறை மின்சக்தி உள்ளது. வெறும் காலில் பூமியில் நடக்கும்போது, இந்த இரண்டு சக்திகளும் சமநிலையை அடைந்து நரம்பு செயல்பாடு சீராகிறது, மன அழுத்தம் குறைகிறது, ரத்த அழுத்தம் நிலைபெறுகிறது, உடல் ஆற்றல் கூடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
புல் மேல், மணல் மேல் நடப்பது கூடுதல் நன்மைகளை தரும் என்றும் கூறப்படுகிறது. இது இயற்கையான சிகிச்சை முறை என சிலர் கருதுகின்றனர்.
 
எனினும், வெளியில் வெறும் காலில் நடப்பது வழியாக கிருமிகள் உடலில் தொற்றிக்கொள்ளும் அபாயம் இருப்பதையும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
 
அதனால், பாதுகாப்புடன், சுத்தமான இடங்களில் இந்த பழக்கத்தை முயற்சிக்கலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments