Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா?

Webdunia
வியாழன், 19 மே 2022 (23:26 IST)
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது  படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு  பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த  தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
 
 
* வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து அடை தட்டி நிழலில் காயவைத்து அதை தேங்காய் எண்ணெயில்  ஊறவைத்து முடியில் தேய்த்து வந்தால் தலை முடி கறுப்பாக வளரும்.
 
* ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று தேக்கரண்டி தேயிலையைப் போட்டு காய்ச்சி தைலப்பதத்தில் இறக்கி எடுத்துக்  கொள்ளவேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி கருமையாகவும் செழித்தும் அடர்த்தியாகவும்  வளரும்.
 
* இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை  பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
 
* கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு  தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
 
* நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின்  மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை  வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments