Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு விஷ முறிவு மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (19:30 IST)
பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மெடிசன் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்கிற சர்வதேச மருத்துவ தொண்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் உலக அளவில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கு இறப்புகள் சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகளில் ஏற்படுகிறது.

சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே அமைந்திருக்கும் நாடுகளில் பாம்புக்கடியின் விஷத்தை முறிக்கவல்ல ஒரே மருந்தின் தற்போதைய கையிருப்பு அடுத்த ஆண்டின் மத்தியில் தீர்ந்துவிடும் என்று எம்எஸ்எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட பாம்பு விஷ முறிவு மருந்தை தயாரிக்கும் ஃபிரென்ச் நிறுவனம் இந்த மருந்து தயாரிப்பை கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது.

இந்த மருந்து தயாரிப்பு வர்த்தக ரீதியில் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால் இதன் தயாரிப்பை நிறுத்துவதாக அப்போது அந்த நிறுவனம் காரணம் கூறியிருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments