Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்கால காய்ச்சலில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (18:52 IST)
மழைக்காலம் வந்து விட்டாலே பலருக்கு காய்ச்சல் வந்து விடும் என்பதும் ஜலதோஷம் பிடித்து விடும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மழைக்காலங்களில் வரும் காய்ச்சலில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் 
 
மழைக்காலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மழைக்காலத்தில் வரும் வைரஸ் காய்ச்சல் 5 முதல் 6 நாட்கள் வரை இருக்கும் என்பதும் குழந்தைகள்  மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் எளிதாக அவர்களை வைரஸ் காய்ச்சல் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக நாமே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதை தவிர்த்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எவ்வளவு தாமதிக்காமல் மருத்துவமனை செல்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது குறிப்பிடத்தக்கது
 
காய்ச்சல் நேரத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி ஒருசில பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். மழை நேரத்தில் கை கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறாமல் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும்
 
முடிந்த அளவு குடிப்பதற்கு சூடான தண்ணீரை பயன்படுத்துவது நல்லது குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்து விட்டு காய்கறி சூப் அசைவ சூப் உள்ளிட்டவற்றை குடிக்கலாம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments