Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்
இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர்.


 


இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.
 
ஆப்பிள்: இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.
 
திராட்சை:  பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
 
ஆரஞ்சு: காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.
 
மாதுளை: வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.
 
வாழைப்பழம்: மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி ஆகியவற்றில் இருந்து குணம் அளிக்கிறது.
 
பப்பாளி: பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.
 
நெல்லிக்கனி: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.
 

Share this Story:

Follow Webdunia tamil