Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் வளர்ச்சியில் தாய்மார்க்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை....!

Webdunia
குழந்தைகளுக்கு பிறந்த பின் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் அளிக்க வேண்டியது தாய்மாரின் கடமை. குழந்தைகள் திட  உணவை உண்ண தொடங்கும் நிலையில் கூட அவர்களுக்கு சத்துள்ள, உடலின் உறுப்புகள், உள்ளுறுப்புகள் மற்றும் அவர்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை  நிலைப்படுத்த உதவும் உணவுகளை அளிப்பது அவசியம்.
குழந்தைகள் அவர்தம் வளர்ச்சிக்கு போதுமான அளவு உறக்கம் அவசியம். குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் அதிக நேரம் உறங்கியே இருப்பார்கள். அப்பொழுது  தான் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். குழந்தைகளுக்கு தகுந்த நேரத்தில் இடைவெளி விட்டு பால் அளிக்க வேண்டியது தாய்மார்களின்  கடமையாகும்.
 
குழந்தை இருக்கும் இடம், குழந்தையை தொடும் நபர்கள், குழந்தாய் எடுத்து விளையாடும் பொருட்கள் மற்றும் தவழ்ந்து விளையாடும் இடங்கள், படுத்து உறங்கும் இடம் என அனைத்து பகுதிகளும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் அவர்கள் உண்ணும் உணவு மிக சுத்தமான  பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என சரிபார்ப்பது அவசியம்.
 
குழந்தைகள் வளர்ச்சியில் அந்தந்த கால கட்டத்தில் தேவைப்படும் சத்துக்களை தவறாமல் தருவது போல், அந்த அந்த வயதில் போடா வேண்டிய தடுப்பூசிகள்  மற்றும் பிற ஊசிகளை குழந்தைகளுக்கு தறவாமல் போட்டு விட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments