Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் தங்கள் கரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

பெண்கள் தங்கள் கரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
, செவ்வாய், 8 டிசம்பர் 2015 (11:40 IST)
பெண்களாகிய நாம் தண்ணீரில் அடிக்கடி நம் கரங்களை உபயோகிக்கிறோம். இதனால் நீர்த்துளிகள் இருந்துகொண்டே இருப்பதால் கரங்களில் தோல் உரிந்து உலர்ந்து விடுகிறது.

 

 
வெட்டுக்கள், சில ரசாயனங்கள் மூலம் கடுமையான தோல் எரிச்சல், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
மிகவும் சூடான பொருட்கள் மற்றும் வெப்ப தீக்காயங்களால் பாதுகாப்பற்ற நிலை உருவாகும்.
 
பாதுகாக்கும் வழிமுறைகள்:
 
1. தண்ணீரில் அடிக்கடி கைகளை உபயோகிக்கவேண்டுமானால், அப்பொழுதெல்லாம் மெல்லிய ரப்பர் உறைகளை அணிந்து கொள்ளுங்கள். இந்த உரைகளில் சிறிய துளைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உரையின் உட்பாகத்தில் வேர்வை சேர்த்துவிடும்.
 
2. இது முடியாவிட்டால் கைகளை நன்றாகத் துடைத்து விடுங்கள். முக்கியமாக விரல் இடுக்கிகள், நகங்களுக்கு உள்ளே நன்றாகத் துடையுங்கள்.
 
3. இல்லாவிட்டால் இதற்கான விற்கப்படும் கிரீம்களைப் (வேஸ்லீன்) பயன்படுத்தலாம். காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் இக்கிரீம்களைத் தடவிக்கொள்ளலாம்.
4. கிளிசரின், சர்க்கரை இவற்றைச் சேர்த்து உங்கள் உட்கரங்களில் அடிக்கடி தடவி வந்தாலும் கரங்கள் மிருதுவாக இருக்கும்.
 
5. வெளியே சென்று வந்தால் கண்டிப்பாக லிக்கியுட் சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவவும்.
 
6. கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு கைகளை கழுவும் போது, கை மணமாகவும், சுத்தமாகவும் ஆவதுடன் கிருமிகள் அழிக்கப்படுகிறது. நகங்களும் சுத்தமாகும்.
 
7. உள்ளங்கையில் தீ சுட்டு விட்டால் உடனடியாக அந்த இடத்தில் நெய்யைத் தடவ எரிச்சல் அடங்கிவிடும், சீழ்பிடிக்காது.

Share this Story:

Follow Webdunia tamil