Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்?

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (18:10 IST)
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் இந்த நேரத்தில்  சரியான முன்னேற்பாடுகளை செய்து உதிரப்போக்கை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
 
மாதவிடாய் காலங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் கூடுதலாக நாப்கின்களை கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல் கூடுதலான உடைகள்  மற்றும் டிஷ்யூ எனப்படும் ஈரப்பதம் உள்ள துணிகளை வைத்துக் கொள்வது நல்லது. 
 
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை  குறைப்பதற்கு இறுக்கமான ஆடைகளை அணியாமல் மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மேலும் அதிக அளவு உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி எள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. 
 
எலுமிச்சம் பழம் சாறு அதிகமாக கொடுப்பதன் மூலம் உதிரப்போக்கை கட்டுப்படுத்தலாம்.  ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கும் தேதி மற்றும் முடியும் தேதிகளை தவறாமல் குறித்து வைத்துக்கொண்டு மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் உடல் மற்றும் மனரீதியாக தயாராக வேண்டும். 
 
மாதவிடாய் காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், குறிப்பாக மிதமான சூடு உள்ள தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும்  தினமும் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்பதும் இனிப்புகள் நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

அடுத்த கட்டுரையில்
Show comments