சத்துக்கள் நிறைந்த கிவி!!

Webdunia
திங்கள், 9 மே 2022 (17:45 IST)
கிவி பழங்கள் உடம்புக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, போலே மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளன.
 
இந்த கிவி பழம் இரத்தம் உறைவதை தடுக்கும். இந்த பழம் முக்கியமாக இதய பிரச்சினையை தடுக்கும். பழங்களில் சத்துக்கள் அதிகம் உள்ள பழம் கிவி பழம் ஆகும்.
 
கிவி பழத்தில் 9 வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. கிவி பழங்களை அதிகமாக வளரும் குழந்தைகள் சாப்பிட்டால் நோயின்றி ஆரோக்கியமாக வளருவார்கள். கிவி பழத்தில் அதிகமாக இரும்பு சத்துக்கள் உள்ளன.
 
உணவிற்கு பிறகு ஜீரண சக்திக்காக கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம். புற்றுநோய் வராமல் தடுக்கவும் இந்த பழம் பெரும் பங்கு வகிக்கிறது.
 
கிவி பழங்கள் சாப்பிடுவதால் பார்வை திறன் நன்றாக இருக்கும். நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமான திறனை   மேம்படுத்துகிறது.
 
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த கிவி பழத்தை சாப்பிட்டு வர விரைவில் ஆஸ்துமா குணமாகும். உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறரின் அழுத்தத்திற்காக குழந்தை பெற வேண்டாம்: தம்பதிகளுக்கான முக்கிய ஆலோசனைகள்!

உடல் எடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பு உண்டா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான 6 முக்கிய காரணங்கள்!

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments