Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் எடையை குறைக்க விரும்பினால் சாப்பிடுங்கள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

உடல் எடையை குறைக்க விரும்பினால் சாப்பிடுங்கள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

உடல் எடையை குறைக்க விரும்பினால் சாப்பிடுங்கள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)
பூசணிக்காயில் உடல்நல பயன்களை பற்றி கேள்விப்பட்டால் வாயடைத்து போவார்கள். பலருக்கு அதனால் கிடைக்கும் உடல்நல பயன்களை பற்றி தெரிவதில்லை. 


 
 
அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்டவர்கள் தங்கள் பாரம்பரிய உணவு பழக்கத்தில் பூசணிக்காயையும் சேர்த்திருந்தார்கள். பூசணிக்காயில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து இருப்பதால் மலங்கழித்தல் சுலபமாக நடக்கும். ஒரு கப் பூசணிக்காயில் 3 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.
 
தேவையான ஆற்றல்
 
இதில் வளமையான அளவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளதால், உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து உதவிடும்.
 
உடல் எடையை குறைக்கும்
 
பூசணியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உங்கள் உடல் எடையை குறைக்கவும் இது உதவும். அதிக உடல் எடையை கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
 
பீட்டா கரோட்டின் நிறைந்தது
 
பூசணியில் உள்ள ஒளிமிக்க ஆரஞ்சு நிறம், அதில் இருக்கும் அதிகளவிலான பீட்டா கரோட்டின் அடக்கப் பொருளை வெளிக்காட்டும். பீட்டா கரோட்டின் என்பது வைட்டமின் ஏ-யின் முன்னோடி. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கும், கண் பார்வைக்கும் இது தேவைப்படுகிறது.
 
சருமத்திற்கு நல்ல பாதுகாப்பு
 
சரும புண்களை ஆற்ற, சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, தழும்புகளை மறைய செய்யவும் இது உதவுகிறது.
 
சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்
 
உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிறகு எலெக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது பூசணிக்காய். வாழைப்பழத்தில் இருப்பதை விட அதில் அதிகளவிலான பொட்டாசியம் இதில் உள்ளது. (பூசணிக்காயில் 564 மி.கி. vs வாழைப்பழத்தில் 422 மி.கி)
 
சளி மற்றும் காய்ச்சல்
 
சளி மற்றும் காய்ச்சலை போக்கவும் இது பெரிதும் உதவும். ஒரு கப் பூசணிக்காயில் 11 மி.கி. வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் சி-யில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
 
பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, பீட்டா கரோட்டின் உட்கொள்பவர்களுக்கு தொற்றின் இடர்பாடு குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil