Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் அற்புத மருந்து தேன்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் அற்புத மருந்து தேன்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் அற்புத மருந்து தேன்
ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவை தேன் அதிகரிக்கச் செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வது மிக மிக அவசியமான ஆரோக்கியம். உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைப் பொறுத்துத்தான் உங்கள் திறன் உள்ளது.


 


ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் குறைந்தால், செயல்திறனும் குறையும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்தால், சுவாசம்கூட சீராகிவிடும். 
 
தினமும் தேன் பருகினால் உங்கள் செயல் திறன் முன்னெப்போதையும்விட உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள். ஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் போன்றவை தேனில் அடக்கம். தேனில் கொழுப்புச் சத்து சிறிதும் இல்லை. தேன் எல்லோருக்குமே ஏற்ற உணவு என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. ஆய்வின்படி 70% இந்தியப் பெண்கள் பல காரணங்களால் ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தேன் அற்புதமான மருந்து.
 
தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
 
தேனைப் வெந்நீரில் கலந்து தேனைப் பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கரையும், குளிர் நீரில் தேனைக் கலந்து பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கூடும் என்றும் நம்பிக்கை உள்ளது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தேன் மிக உகந்தது. அது உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை வழங்குகிறது.

வெந்நீரில் தேனையும் மிளகையும் கலந்து பருகினால், ஆஸ்துமா பாதிப்பைச் சுலபமாகத் தள்ளிப் போடலாம். தொடர்ந்து இப்படிப் பருகுவதன் மூலம் முழுமையாக ஆஸ்துமாவிலிருந்து விடுபடவும் வாய்ப்புண்டு. தாகத்தைத் தணிப்பதிலும் தேனின் பங்கு உண்டு. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
 
சிறிதளவு குளிர்ந்த நீரில் தேனைக் கலந்து குடித்தால் உடனே தாகம் தணியும். ‘பார்த்தேன் ரசித்தேன்’ எனத் தொடங்கி ஒரு பாடல் முழுக்கத் தேனைப் பயன் படுத்தியிருப்பார் கவியரசு கண்ணதாசன். வாழ்க்கை முழுக்க தேனைப் பயன்படுத்தினால், பாடல் போல வாழ்வும் இனிக்கும்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெஜிடபிள் வெள்ளை குருமா