Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரோக்கிய உணவுகள்

ஆரோக்கிய உணவுகள்
ஆரோக்கிய உணவு என்றால் உணவுப்பொருள்களின் இயற்கையான நிறம், மணம், ருசியை இழக்காமலும், வைட்டமின்களையும், தாதுப்பொருள்களையும் பாதுகாப்பவையாகும்.


 

 
இயற்கை வைத்தியத்தில் தாது உப்புகள் நிரம்ப உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள், தளிர்கள் முதல் தரமான உணவுகளாகும்.
 
இயற்கை வைத்தியத்தில் புரதப் பொருட்கள், மாவுப் பொருள்கள் மற்றும் சர்க்கரைப் பொருள்கள், கொழுப்புப் பொருள்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் இரண்டாந்தரமான உணவுகள் ஆகும்.
 
உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும், உடலில் உள்ள செல்கள் வளர்ச்சியடைவதற்கும், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
 
சத்தான உணவை விட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு.  நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக் கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.
 
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும்.

வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். 

நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவது அவசியம் ஆகும்.
 
ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்றதுபோல் உணவு உண்ணவேண்டும். ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்து அமைய வேண்டும்.
 
சஞ்சீவி உணவுகளாக பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.

Share this Story:

Follow Webdunia tamil