Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்களைத் தீர்க்கும் மருந்தாக பயன்படும் பூண்டு

நோய்களைத் தீர்க்கும் மருந்தாக பயன்படும் பூண்டு

Webdunia
பூண்டுத் தாவரங்கள் பல மிகப் பழைய காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றன.


 


பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. 
 
பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. பூண்டுத் தாவரங்களிற் பல அழகிய பூக்களையோ, இலைகளையோ அல்லது தோற்றத்தையோ கொண்டிருப்பதனால், அவை அலங்காரத் தாவரங்களாகவும் பயன்படுகின்றன.
 
பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. தினமும் பூண்டு சாப்பிட்டுவந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காது என்பது ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
 
* தினமும் இரண்டு பூண்டுப் பல் சாப்பிட்டுவந்தால், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கும்.  உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
 
* புற்றுநோய்க்கான அபாயம் குறைவதுடன், புற்றுநோய்க் கட்டிகளை வளரவிடாமல் தடுக்கும்.  உடலில் தேவையற்ற வேதிப்பொருட்களான பாதரசம் மற்றும் காரீயம் போன்றவற்றை உடலைவிட்டு அகற்ற, பூண்டு உதவுகிறது. 
 
* புண்கள், காயங்கள் விரைவில் ஆறுவதற்கும், வாயுப் பிரச்சனை வராமல் தடுப்பதற்கும் இது மருந்து.  தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, அரை டம்ளர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதில் இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பல் சேர்த்து, நன்றாகக் காய்ச்சவும். அரை டம்ளராகச் சுண்டியதும், வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
 
* இரண்டுப் பூண்டுப் பல்லை சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து, தோலில் ஏற்படும் எரிச்சல், சிறிய காயங்கள் மீது தடவிவர பலன் கிடைக்கும். இதனை அளவாக பய்ன்படுத்துவது நல்லது.
 
* பூண்டு நல்ல ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும் தன்மைகொண்டது. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டுவந்தால், கெட்டக் கொழுப்பு கரைந்து, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும்.
 
* வயிற்றுவலி மற்றும் குடல் பகுதியில் பிரச்சனை உள்ளவர்கள், பூண்டுக் கஷாயம் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். இரண்டு முதல் நான்கு பூண்டுப் பல்லைச் சுட்டு, தேனில் கலந்து சாப்பிட, காய்ச்சல், சளி, இருமல் குணமாகும்.  
 
* நெஞ்சு எரிச்சல், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பித்தம் உள்ளவர்கள், ஏதேனும் அறுவைசிகிச்சை செய்தவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் மருத்துவர் பரிந்துரையின்றிப் பூண்டினைப் பயன்படுத்த வேண்டாம். 
 
* பூண்டுப் பல்லை வேகவைக்காமல் சாப்பிடுவது, நல்ல பலனைத் தரும். வாதம், கபம் உள்ளவர்களுக்குப் பூண்டு ஏற்றது. ஒரு நாளைக்கு நான்கு பூண்டுப் பற்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments