Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பித்தப்பை பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் முக்கிய தகவல்கள்

Mahendran
திங்கள், 24 பிப்ரவரி 2025 (19:26 IST)
பித்தப்பை என்பது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது, கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பையாகும். பித்தப்பை, கல்லீரல் வெளியிடும் பித்தநீரை சேமித்து, உணவுகளை செரிப்பதில் உதவுகிறது.
 
பித்தநீரில் உள்ள கொழுப்புகள் மற்றும் பிற பொருட்களில் மாற்றம் ஏற்பட்டால், பித்தக்கற்கள் உருவாகலாம். இந்த கற்கள் பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தும் போது, பித்தப்பை தாக்குதல் ஏற்படுகிறது. நீர் சரியாக பாயாமல் இருந்தால், வீக்கம் மற்றும் கடுமையான வலியும் தோன்றலாம். இது சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை நீடிக்கக்கூடும்.
 
பித்தப்பை பிரச்சனையின் முக்கிய அறிகுறிகள்
 
மேல் வயிற்று வலி – வயிற்றின் மேல்பகுதி, விலா எலும்புகளுக்கு கீழே கூர்மையான, தாங்க முடியாத வலி.
 
முதுகு, வலது தோள்பட்டை வலி – வயிற்றுவலியுடன் கூடிய முதுகு மற்றும் வலது தோள்பட்டை வலி.
 
குமட்டல், வாந்தி – பித்தக்கற்களால் குமட்டல், வாந்தி, காய்ச்சல், குளிர் போன்றவை ஏற்படலாம்.
 
அஜீரணக் கோளாறு, வயிறு வீக்கம் – சரியாக செரிக்காமல், வயிற்று உப்புசம் அதிகரிக்கும்.
 
மஞ்சள் நிற தோல், கண்கள் – பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாற்றம்.
 
சாம்பல் அல்லது வெளிர் நிற மலச்சிக்கல் – பித்தநீர் ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், மலத்தின் நிறம் மாறும்.
 
அடர்நிற சிறுநீர் – ரத்தத்தில் பிலிரூபின் அதிகரிப்பதால் சிறுநீரின் நிறம் அடர்த்தியாகும்.
 
இந்த அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் முக்கிய தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு மேல ஃபோன் பாத்தா கண்ணு காலி..?! - அதிர்ச்சி தகவல்!

அடிக்கடி சூப் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? என்னென்ன சூப் சாப்பிடலாம்?

சருமத்தை மென்மையாக பராமரிக்க சிறந்த வழிகள் என்னென்ன?

வயதான அறிகுறிகளை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments